ஸ்ரீவில்லிபுத்தூரில் மூன்று ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில், தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் 3 ஆசிரியர்களுக்கு
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் மூன்று ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில், தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் 3 ஆசிரியர்களுக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில், தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் 3 ஆசிரியர்களுக்கு 2015-16 ம் ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பெ.ஜெயக்குமார். 1996-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், தற்போது ஆங்கில பட்டதாரி ஆசிரியராக இப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
காவல் நண்பர்கள் குழுவில் உறுப்பினராக உள்ள இவர் நாச்சியார்பட்டி நூலக வாசகர் வட்டடத் தலைவராகவும் உள்ளார்.
இவர் எழுதிய ஏராளமான கவிதைகள், துணுக்குகள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் நாளிதழ்கள் மற்றும் புத்தகங்களில் பிரசுரம் ஆகியுள்ளது. மதுரை யாதவர் கல்லூரியில் இவரது ஆய்வுக் கட்டுரை சிறந்த ஆய்வுக் கட்டுரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்காக தமிழ் சக்தி விருது கிடைத்தது. மேலும் சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் நோயிலிருந்து விடுதலை என்ற தலைப்பிலான இவரது கவிதைக்கு முதலிடம் கிடைத்து சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இவரது பல்வேறு கல்வி மற்றும் சமுதாய சேவையைப் பாராட்டி தமிழக அரசு மாநில நல்லாசிரியர் விருது வழங்குகிறது.
ச.செல்வி: சொக்கலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையைக உள்ளார். 1991-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்த இவர் 13 ஆண்டுகள் இப் பதவியில் இருந்தார். பதவி உயர்வில் 5 ஆண்டுகள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து, மீண்டும் பதவி உயர்வு பெற்று கடந்த 7 ஆண்டுகளாக நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். அரசுப் பள்ளியில் மாணவர்களை தீவிரமாக சேர்க்கப் பல்வேறு நவீன யுக்திகளைக் கையாண்டு வரும் இவரது சேவையைப் பாராட்டி இப் பள்ளிக்கு மாநிலத்தில் சிறந்தப் பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. இவரது சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இவருக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மாநில விருது பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்திற்கு பெருமை சேர்த்துள்ள இரு ஆசிரியர்களையும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான்சேவியர்ராஜ், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி ஆகியோர் சனிக்கிழமை பாராட்டினர்.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் இ.ராஜேஸ்வரி. 1989-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த இவர் 2005-ம் ஆண்டு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். 2007-ல் கான்சாபுரம் நடுநிலைப் பள்ளியில் வரலாறு பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிந்தார். பின்னர் 2008-முதல் பதவி உயர்வில் இப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது பணித் திறனைப் பாராட்டி மாநில அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குகிறது.
இவர்களுக்கு செப்டம்பர் 5-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நற்சான்றிதழ், ரூ.10 ஆயிரம் பரிசு மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்குகிறார்.