பல்வேறு விழாக்களில் கலந்து கொள்வதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக ஆளுநர், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
நீலகிரி மாவட்ட குன்னூரில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 34 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. அதில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்.
அந்த விழாவை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை, தமிழக ஆளுநர், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலர் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
அதனையடுத்து, அங்கிருந்து அவர் ஆளுநர் மாளிகை சென்றார். இன்றைய இரவு அங்கு தாங்கும் அவர், நாளை காலை சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையம் செல்கிறார். அங்கு ராணுவ பயிற்சி முடித்து பணிக்கு செல்லும் அதிகாரிகள் விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
சென்னைக்கு வந்த பிரணாப் முகர்ஜி ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை இரவு தங்கியிருந்தார். அங்கு சென்ற வாசன், பிரணாப் முகர்ஜியை சுமார் 20 நிமிஷங்கள் சந்தித்து பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.