தற்போதைய செய்திகள்

என்னுடைய வெற்றி உறுதியாகி விட்டதால் தேர்தலை நிறுத்த சதி: வருமான வரிச் சோதனை குறித்து தினகரன்

அம்மாவின் வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என்று முடிவு செய்து திட்டமிட்டு எதிரிகளும், துரோகிகளும் தூண்டி விட்டதே இந்த திடீர் வருமான வரிச் சோதனைகளுக்கான காரணம் என அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன்

RKV

அம்மாவின் வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என்று முடிவு செய்து திட்டமிட்டு எதிரிகளும், துரோகிகளும் தூண்டி விட்டதே இந்த திடீர் வருமான வரிச் சோதனைகளுக்கான காரணம் என அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தனது வெற்றி உறுதியாகி விட்டதால்; அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஓபிஎஸ் அணியினர், தனது வெற்றிக்கு பக்கபலமாக தனது ஆதரவாளர்கள் மேலும் வலு சேர்த்து விடக் கூடாது என்று திட்டமிட்டு தனது ஆதரவாளர்களை முடக்கும் நோக்கத்தில் இப்படியான நடவடிக்கைகளை தூண்டிவிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் மற்றும் பாண்டியராஜன் இருவருக்கும் இது தான் வேலை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் சோதனைகள் நடைபெறுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறி உள்ளார். வருமான வரித்துறையினரிடம் உள்ள ஆதாரங்களைப் பற்றி தமிழிசைக்கு எப்படித் தெரியும்? எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்? உண்மையில் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் தான் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது. ஆக மொத்தம் எனது வெற்றி உறுதியாகி விட்டதால் திட்டமிட்டு இடைத்தேர்தலை நிறுத்துவதற்காக எதிர்கட்சிகளும், துரோகிகளும் சேர்ந்து நடத்தும் சதி இது என தினகரன் குற்றம் சாட்டி இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT