தற்போதைய செய்திகள்

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது

DIN

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நள்ளிரவு 12 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அமல்படுத்தினார்.

முன்னதாக ஜிஎஸ்டி அறிமுக சிறப்பு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் தொடங்கியது.

விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அமைச்சர்கள், மாநில நிதி அமைச்சர்கள், தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி ஒரே தேசம் ,ஒரே வரி என்ற மக்களின் கனவு இன்று நனவாகிறது. இதனால் மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு வெளிப்படையான வரிவிதிப்பு முறையாக இருக்கும் .ஜிஎஸ்டி எளிமையானது, வெளிப்படை தன்மையுடையது ஜிஎஸ்டி யால் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு முடிவு கட்டப்படும் எனவும் இந்த வரிவிதிப்பு முறை இந்தியாவுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என மோடி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT