தற்போதைய செய்திகள்

ப.சிதம்பரம் மெர்சல் குறித்து டிவிட்டரில் என்ன கூறினார்?

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வைரல் ஆகி தேசியத் தலைவர்கள் பலரும் கருத்து

DIN

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வைரல் ஆகி தேசியத் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர். சமீபத்தில் மெர்சல் குறித்து ப.சிதம்பரம் தெரிவித்த கருத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். பதிலுக்கு பதில் என ப.சிதம்பரம் ரீ ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் மெர்சல் குறித்து கூறியது, 'அரசின் கொள்கைகளைப் பாராட்டி மட்டுமே இனி டாக்குமெண்டரி படங்கள்தான் எடுக்க முடியும். அதற்கென சட்டம் வந்தாலும் வரலாம்' எனப் பதிவிட்டிருந்தார்.  

அதற்குப் பதிலாக பொன்.ராதாகிருஷ்ணன், 'மெர்சல் படத்திற்கு ப.சிதம்பரம் பைனான்ஸ் செய்தாரா?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலடியாக ப.சிதம்பரம், 'மெர்சல் படத்தை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்௧ள் ௭ல்லோரும் அப்படத்துக்கு பணம் கொடுத்தவர்கள் தான். அவ்வகையில் மெர்சலுக்கு நானும் விரைவில் பணம் கொடுப்பேன்' என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

SCROLL FOR NEXT