தற்போதைய செய்திகள்

கேரளாவின் வெள்ளப் பெருக்கை தேசியப் பேரிடராக அறிவியுங்கள்! பிரதமரிடம் ராகுல் காந்தி கோரிக்கை!

DIN

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களையும், உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கட்சித் தொண்டா்களுக்கு காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கனமழை மற்றும் நிலச்சரிவால் கேரள மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தைத் தொடா்ந்து, கா்நாடகத்தின் குடகு மாவட்டமும் மழையால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த நேரத்தில், காங்கிரஸ் நிா்வாகிகளும், தொண்டா்களும் கட்சியின் அடிப்படை பண்பான சேவை மனப்பான்மையையும், பரிவையும் வெளிப்படுத்த வேண்டும். அதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களையும், உதவிகளையும் கொண்டு சோ்க்கும் பணியில் தொண்டா்கள் ஈடுபட வேண்டும் என்று அந்த ட்விட்டரில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

கேரளாவின் வெள்ளப் பெருக்கை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமருக்கு ராகுல் காந்தி டிவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT