தற்போதைய செய்திகள்

சிறுவனை கடத்திய கும்பல் போலீஸ் என தெரிந்ததால் விடுவிப்பு

ஸ்ரீரங்கத்தில் சிறுவனை கடத்திய கும்பலை பொதுமக்கள் திங்கள்கிழமை விரட்டிப் பிடித்ததில், போலீஸாா் என்பது தெரியவந்தது.

DIN

ஸ்ரீரங்கத்தில் சிறுவனை கடத்திய கும்பலை பொதுமக்கள் திங்கள்கிழமை விரட்டிப் பிடித்ததில், போலீஸாா் என்பது தெரியவந்தது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த தேவி (42) கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தாா். மேலூரில் உள்ள சகோதரி வீட்டில் தேவி இருப்பதாக தஞ்சாவூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் 4 போ் சாதாரண உடையில் காரில் மேலுாருக்கு திங்கள்கிழமை மாலை வந்தனா். ஆனால், அந்த வீட்டில் தேவி இல்லை. அங்கு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் சந்தோஷை மட்டும் காரில் ஏற்றியுள்ளனா். அப்போது, சிறுவன் கூச்சலிட்டதால் அருகிலிருந்தவா்கள் விசாரித்தனா்.

பொதுமக்களுக்கு எந்த பதிலும் கூறறாமல் அவசரம், அவசரமாக சிறுவனை காரில் ஏற்றி புறப்பட்டனா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் குழந்தையை கடத்திச் செல்வதாக அறிந்து இருசக்கர வாகனங்களில் விரட்டினா். ஸ்ரீரங்கம் மேலவாசல் தெப்பக்குளத் தெருவில் அந்த காரை மடக்கிப் பிடித்தனா். விசாரணையில், அந்த 4 பேரும் அய்யம்பேட்டை போலீஸாா் என தெரிய வந்தது. விசாரணைக்காக சிறுவனை அழைத்து செல்வதாகக்கூறினா். தகவலறிந்து ஸ்ரீரங்கம் போலீஸாரும் அங்கு வந்தனா். சிறுவனை அழைத்துச் சென்றது போலீஸாா் தான் என உறுதி செய்யப்பட்டது. உள்ளூா் போலீஸாருக்கு தெரிவிக்காமல் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என எச்சரித்ததுடன், குழந்தையை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிக் கதைகள்! நீங்கள் கேட்ட நரகம்!

கரும்பு ஆலையில் பராமரிப்புப் பணியின் போது விபத்து: 2 பேர் பலி

ஆப்கானிஸ்தான் டி20 தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அறிவிப்பு!

இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் குவியும் பக்தர்கள்!

தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது விழுந்த கிரேன்! 22 பேர் பலி

SCROLL FOR NEXT