வீக் எண்ட் ஜோக்ஸ் - கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!
ஓடிப் போக நினைத்த காதல் ஜோடி
காதலன்: நாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?
காதலி: அடப் பாவி... இருந்த ஒரு பைக்கையும் வித்துட்டியா?
***
மீண்டும் ஒரு வாழைப்பழம்
வாழைப்பழம் எவ்வளவு?
ஏழு ரூபாய்
2 ரூபாய்க்கு வராதா?
தோல் மட்டும்தான் வரும் பரவாயில்லையா?
அப்படீன்னா தோலை எடுத்துட்டு பழம் மட்டும் 5 ரூபாய்க்கு கொடுங்க
**
மன்னிப்பு...மன்னிப்பு...மன்னிப்பு
நீ உன் மனைவியிடம்மன்னிப்பு கேட்டியாமே
ஆமா... ஆமா... ஆமா...
ஏன் மூணு தடவை சொல்றே?
எனக்கு மூணு பொண்டாட்டிங்க
**
அறியாத மனசு
சாப்பிட வந்தவர்: ஏம்ப்பா... கத்தரிக்காயை அப்படியே முழுசா போட்டிருக்கியே... ஏன்?
சர்வர்: அரி'யாமல் செய்த தவறுக்கு வருந்துகிறோம் சார்...
- டி.மோகனதாஸ், நாகர்கோவில்.
பயம் பயமாய் இருக்கிறது டாக்டர்!
டாக்டர் அந்த நர்ஸை மாத்திடுங்க
ஏன்?
பேஷண்டை நல்லா கவனிச்சுக்கன்னு நீங்க சொன்னீங்க. அவங்க ராத்திரி பூரா
என் பக்கத்துல உட்கார்ந்து என் முகத்தையே பார்த்துக்கிட்டிருந்தாங்க. எனக்குப் பயமா இருக்கு'
- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்...போ...போ..போ
டாக்டர் ஆபரேஷன்ல நான் பொழைச்சுக்குவேனா?
அதை ஆபரேஷன் முடிஞ்சாதான் சொல்ல முடியும்?
அப்போ ஆவியா வந்து நான் கேட்கணுமா டாக்டர்?
- கு.அருணாசலம், தென்காசி.
ஒரு நாள் முதல்வர்!
தலைவர் நிறைய கல்லூரிகளை ஏன் நடத்துகிறார்?
நிறையப் பேர் முதல்வர் பதவியை எதிர்பார்ப்பாங்களே
- எஸ்.மோகன், கோவில்பட்டி.
ஃபாரின் சரக்கு
ஹலோ... நான்தான் உங்க பக்கத்துவீட்டுக்காரர் பேசுறேன். எங்கே இருக்கீங்க? உங்க வீட்டு பூட்டை உடைச்சு திருடன் புகுந்துட்டான்
ஐயோ அது ஃபாரின் பூட்டாச்சே
- சம்பத்குமாரி, பொன்மலை.