தற்போதைய செய்திகள்

நல்ல பசி உண்டாகவும், குடல் புண் மற்றும் பித்தம் சார்ந்த குறைபாட்டை சீர் செய்ய உதவும் துவையல்  

முதலில் வேப்பம் பூவை சுத்தப்படுத்தி எண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும். பச்சரிசியை வறுத்துக் கொள்ளவும்.

கோவை பாலா

வேப்பம் பூ துவையல்

தேவையான பொருட்கள்

வேப்பம் பூ - 50 கிராம்
வெல்லம் - 50 கிராம்
மிளகு - 1 ஸ்பூன்
பூண்டு - 3 பல்
உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு
பச்சரிசி - 10 கிராம்

செய்முறை

முதலில் வேப்பம் பூவை சுத்தப்படுத்தி எண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும். பச்சரிசியை வறுத்துக் கொள்ளவும். வதக்கிய வேப்பம் பூவுடன் வறுத்த பச்சரிசி, வெல்லம், மிளகு, பூண்டு மற்றும் உப்பு அனைத்தையும் சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தத் துவையலை தினமும் காலை வேளை உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் இந்தத் துவையலை கொடுத்து வந்தால் குடல் புழுக்கள் அழியும். துவையலை தினமும் சாப்பிட்டு வரும்பொழுது பசி உணர்வு அதிகரிக்கும், குடல் புண் மற்றும் பித்த சார்ந்த குறைபாடுகளையும்  சீர் செய்யும் வேப்பம் பூ துவையல்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT