தற்போதைய செய்திகள்

மழைக்காலத்தில் வீட்டு சுவரின் விரிசலைத் தடுக்க இதை செய்து பாருங்கள்!

Snehalatha

மழைக்காலம் என்றாலே பெரும்பாலனவர்களுக்கு சந்தோஷம்தான். ஆனால் சில சமயம் எதிர்பாராத சங்கடங்களையும் அது உருவாக்கிவிடும். குடிசை வீட்டில் இருப்பவர்களின் கூரை ஒழுகும், சிலரின் வீடே மழையில் அடித்துச் செல்லப்படும். ப்ளாட்பார்மில் வசிப்பவர்களின் நிலை பற்றி கூறவே வேண்டாம். மாடி வீட்டில் வசிப்பவர்களுக்குக் கூட சில பிரச்னைகள் உண்டு. முக்கியமாக, மழையில் ஊறிய சுவர்களில் மெல்லிய விரிசல் ஏற்பட்டிருக்கும். கான்க்ரீட் சுவற்றில் நெடுக விட்டிருக்கும் அந்த விரிசலை சமன் செய்ய சிமெண்ட் பூசினால் அது வீட்டின் அழகை பாதித்துவிடும். 

நடுத்தர மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்து வாங்கிய வீட்டில் இப்படி ஒவ்வொரு மழைக்காலம் முடிந்த பின்னர் விரிசல் ஏற்படுவது உண்டு. லட்சக்கணக்கான பணம் செலவழித்து நல்ல தரமான பொருட்கள் பயன்படுத்தி கட்டிய வீட்டில் எப்படி விரிசல் ஏற்படும் என்று திகைக்க வேண்டாம். இதற்குக் முக்கிய காரணம் சிமென்ட், தண்ணீர் மற்றும் மணல் கலவை இவை வேகமாக உலர்ந்துவிடும் போது இத்தகைய விரிசல் ஏற்படுகிறது. தண்ணீரை அடிக்கடி ஊற்றுவதன் மூலம் இதனை தொடக்கத்திலேயே தடுக்கலாம். ஆனால் பல வீடுகள் உடைய மிகப் பெரிய அடுக்கு மாடி கட்டடங்களில் இதையெல்லாம் நடைமுறையில் செயல்படுத்த முடியாமல் போகிறது.

அண்மையில் ஒரு ஆய்வில் இதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள டிரெக்செல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அனல் மின் நிலையங்களில் வீணாகிவிடும் நிலக்கரி சாம்பலை எடுத்து. அதனை மிக மிக மிக மிகச் சிறிய உருண்டைகளாக்கி, அதனை சிமென்ட் சுவரின் மீது பூசலாம் என்பது தான் அந்த வழி. ஆனால் அந்த உருண்டைகள் மிகவும் நுண்ணியதாக இருக்க வேண்டும். நிலக்கரி சாம்பல் நுண் குளிகைகள், கடல் பஞ்சு போல நேனோ இடைவெளிகளைக் கொண்டவை. இந்த இடைவெளியில், ஒரு குளிகை தன் எடையில் பாதியளவுக்கு நீரை உறிஞ்சிக் கொள்ளும் திறனைக் கொண்டது. இந்த பூச்சிலிருந்து, காங்கிரீட் சுவருக்கு மெல்ல மெல்ல நீர் பரவும் என்பதால், சுவர் விரிசல் அடைவதை தடுக்கலாம் என்று அந்த விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர். இந்த வழியைப் பின்பற்றத் தொடங்கிய சில கட்டடங்கள் இதுவரை விரிசல் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT