முகப்பு
தற்போதைய செய்திகள்

சாயல்குடியில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சி

சாயல்குடியில் வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துப் பணத்தைக்  கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

சாயல்குடியில் வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துப் பணத்தைக்  கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்குக் கடற்கரை சாலையில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை நள்ளிரவில் யாரோ உடைத்திருக்கின்றனர்.

இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஏ.டி.எம்.  எந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.

Advertisement

மேலும் எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா அல்லது கொள்ளை முயற்சியா என காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments