தீரன் சின்னமலை நினைவு தினம்: சிலைக்கு மலர் தூவி மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி அருகே உள்ள பவானி - ஈரோடு பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலையின் நினைவு சின்னம் மற்றும் அவரது உருவ படத்திற்கு
சங்ககிரி: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையில் நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி அருகே உள்ள பவானி - ஈரோடு பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலையின் நினைவு சின்னம் மற்றும் அவரது உருவ படத்திற்கு பல்வேறு கொங்கு அமைப்புகள் மற்றும் அரசியில் கட்சிகள் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தினையொட்டி அவரது நினைவு சின்னம், உருவப் படத்திற்கு சங்ககிரி வட்ட கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம், சங்ககிரி கொங்கு வேளாளர் கவுண்டர்கள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இளைஞர் சங்கத்தலைவர் பி.ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் செல்வராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலர் கே. வெங்கடாஜலம் தலைமையில் ஒன்றியச் செயலர்கள் என்சிஆர் ரத்தினம், கத்தேரி சுந்தரராஜன், மருதாஜலம் உள்ளிட்ட பலர் மலர் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் அதன் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் தலைமையில் மாவட்டச் செயலர்கள் ராஜ்குமார், சரவணன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மலர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் சேலம் மேற்கு மாவட்டச் செயலர் (பொறுப்பு) டி.எம். செல்வகணபதி தலைமையில் மாவட்ட துணைச் செயலர் க.சுந்தரம், ஒனறியச் செயலர் (பொறுப்பு) கே.எம். ராஜேஷ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி. நிர்மலா, முன்னாள் ஒன்றியச் செயலர் பி. தங்கமுத்து ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பாஜக சார்பில் முன்னாள் மாவட்ட பொதுச்செயலர் எஸ்ஆர்எம்.வெங்கடாஜலம் தலைமையில் சங்ககிரி பேரூராட்சி அமைப்பாளர் சி.முருகேசன், பேரூராட்சி பொதுச்செயலர் டி.பி.ராஜேஷ், வழக்குரைஞர் அனுஷயா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
திமுக சேலம் மக்களை தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ காவேரி, முன்னாள் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே. ஆசைதம்பி, முருகேசன், காளியப்பன் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.
பாமக சார்பில் சேலம் தெற்கு மாவட்டச் செயலர் அண்ணாதுரை தலைமையில் மாவட்ட துணை செயலர் சத்ரிய சாமிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய அமைப்பாளர் வடிவேல் ஆகியோர் தீரன் சின்னமலையின் நினைவு சின்னத்திற்கும், உருவப்படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில அதன் ஒருங்கிணைப்பாளர் அம்மையப்பன் தலைமையில் நிர்வாகிகளும், தேமுதிக சார்பில் புறநகர் மாவட்டச் செயலர் ஏ.ஆர். இளங்கோவன் தலைமையில் சங்ககிரி ஒன்றியச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.