முகப்பு
தற்போதைய செய்திகள்

பலுசிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்ட் 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

பலுசிஸ்தான் மாகாணத்தில் கரோனா அச்சுறுத்தல் குறையாததால் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பலுசிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்ட் 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
பகிர்:

பாகிஸ்தான்: பலுசிஸ்தான் மாகாணத்தில் கரோனா அச்சுறுத்தல் குறையாததால் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பலுசிஸ்தான் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

எனினும் கரோனா பரவலின் தாக்கம் குறையாததால், தற்போது ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு பொது இடங்களில் 10 நபர்களுக்கு மேலும் கூடுவதற்கும், ஊர்வலங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

2 நபர்களுக்கு மேல் கார்களில் பயணம் செய்யக் கூடாது. மனைவி மற்றும் குழந்தைகளை மூன்றாவது நபர்களாக அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ள நிலையில், காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தானில் 11,774 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 136 பேர் உயிரிழந்தனர். கடந்த 10 நாட்களாக அங்கு கரோனா உயிரிழப்பு நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →