கேரளத்தில் தொடரும் கனமழை: இடுக்கியில் தற்காலிக பாலம் இடிந்தது
கேரளத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக இடுக்கியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் இடிந்து விழுந்தது.
இடுக்கி: கேரளத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக இடுக்கியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் இடிந்து விழுந்தது.
கேரளத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே இடுக்கி, வயநாடு, கோழிக்கூடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அப்பகுதிகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் முத்திரபுழா நதியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.