தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு கோவையில் அஞ்சலி. 
தற்போதைய செய்திகள்

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு கோவையில் அஞ்சலி

புதுதில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு கோவை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

DIN


புதுதில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு கோவை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 27 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற சில விவசாயிகள் உயிரிழந்தனர். 

இந்நிலையில், தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழந்த விவசாயிகளுக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் பகுதியில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் எம் பி நடராஜன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

மின் வாகனங்களில் 40% தமிழகத்தில் உற்பத்தி: முதல்வர் ஸ்டாலின்

அதிக வயதானவர்கள் பட்டியலில் இணைந்த ஜப்பானிய பெண்!

தில்லியில் சிபு சோரன் உடலுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

SCROLL FOR NEXT