முகப்பு
தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 11, 2020

செய்திகள் - படங்களில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:49 PM
பகிர்:

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து வெற்றிச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், புது தில்லியிலுள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திரண்டிருந்த தொண்டர்களில் ஒரு பகுதி.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த நிலையில் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் கிடந்த பாரதிய ஜனதா அலுவலகம்.

திருப்பதி திருமலை வெங்கடாசலபதி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை  சுவாமி தரிசனம் செய்தார் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபட்ச.

அன்டார்டிக்காவில் பனித் தீவுப் பகுதியில் திரண்டு நிற்கும் பென்குயின் பறவைகள்.

அன்டார்டிக்காவில் போர்னியே விரிகுடா பகுதியில் இருக்கும் பனி போர்த்தியதொரு மலை.

இஸ்ரேலில் ரமத் கன் நகரில் பன்னாட்டு வைரச் சந்தையில் திரண்டிருந்த வாடிக்கையாளர்கள். புதன்கிழமை நிறைவு பெறும் இந்த ஒரு வாரச் சந்தையில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய மற்றும் பன்னாட்டு வைர வணிகர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.