பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 21, 2020
செய்திகள் - படங்களில்
குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி நிகழ்ச்சிக்காக இறுதிக் கட்ட ஏற்பாடுகளுடன் தயாராகிக் கொண்டிருக்கும் சர்தார் படேல் விளையாட்டரங்கம்.
சர்தார் படேல் அரங்கம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள்.
உலகத் தாய்மொழி நாளையொட்டி கொல்கத்தாவில் மொழித் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மக்கள்.
புது தில்லியில் கன்டோன்மென்ட் பகுதியில் சேனா பவன் கட்டடத்துக்கான கால்கோள் விழா பூஜையில் தேங்காய் உடைக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூரிலுள்ள சுடுதளத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட சாரங் ரக பீரங்கி.
விஜயவாடாவில் மகாசிவராத்திரி விழாவையொட்டி கிருஷ்ணா ஆற்றில் புனித நீராடும் மக்கள்.
ஈரானில் நடைபெற்ற புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்குப் பதிவில் தெஹ்ரானில் வாக்களிக்கிறார் ஈரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி.
தென் கொரிய தலைநகர் சியோலில் நிலத்தடி நிலையம் ஒன்றில் கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கையாக ஒருவருக்கொருவர் சுத்தம் செய்துகொள்ளும் பணியாளர்கள்.