தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி பொ. கைலாசமூர்த்தி காலமானார்

DIN

2009-ல் தமிழ்நாடு அரசு வழங்கிய "கலைமாமணி" விருது மற்றும் 2004-ல் மாவட்ட அளவில் வழங்கப்படுகிற "கலைநன்மணி" விருதுகளை பெற்ற தூத்துக்குடி மட்டக்கடை அய்யலுதெருவை சேர்ந்த பொ. கைலாசமூர்த்தி(75) மாரடைப்பால் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். 

அகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்தின் கலைஞர்கள் தேர்வு குழு உறுப்பினர், பாளை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையில் "கிராமிய கலை ஆசிரியர்', அத்துறை நடத்துகிற பல்வேறு கிராமிய கலை விழாக்களில் 'சிறப்பு நடுவர்' இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் தொழிற்சங்க சமூக போராட்ட இயக்கங்களின் பிரதான பிரச்சாரக் கலைஞர் என அவர் நிகழ்த்தி வந்த சாதனைகள் ஏராளம். 

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் 'மண்ணின் பாடல்கள்', அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 'தன்னானே', மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்  ' விடியல் காண ' ஆகிய ஒலிப்பேழைகளில் இவரது குரலை நாம் கேட்கலாம். 

பொதிகை தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் ஓரிரு திரைப்படங்களிலும் கூட நடித்து உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT