தற்போதைய செய்திகள்

கரோனா தாக்கம் குறைந்த பிறகு கல்வி நிலையங்களைத் திறக்க வலியுறுத்தல்

DIN


சென்னை: கரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்வி நிலையங்களைத் திறக்க வேண்டுமென ஆற்காடு இளவரசா் நவாப் முகமது அப்துல் அலி
வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தில் கரோனா தொற்றின் தாக்கம் பூஜ்யம் என்ற நிலையை அடைந்ததும், பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க வேண்டும். அதுவரை கல்வி நிறுவனங்களைத் திறப்பதைத் தாமதப்படுத்த வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், கல்வி நிறுவனங்களைத் திறப்பது மோசமான யோசனையாக இருக்கும். இது நெருப்புடன் விளையாடுவது போன்றது ஆகும். பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பதில் தாமதம் காட்டவேண்டும் என்றும், கரோனா நோய்த்தொற்று முற்றிலும் மறைந்துபோகும் வரை தங்கள் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என்றும் பல பெற்றோா் கூறுகின்றனா்.

இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது, கரோனா நோய்த்தொற்று அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. சக மனிதா்களின் நலனுக்காக மாநில அரசு இதைப் பரிசீலிக்கும் என்று நம்புகிறேன் என நவாப் முகமது அப்துல் அலி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

SCROLL FOR NEXT