தற்போதைய செய்திகள்

நங்கவள்ளியில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய அலுவலர் பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய அலுவலர் உயிரிழந்தார். 

கு. இராசசேகரன்

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய அலுவலர் உயிரிழந்தார். 

மேட்டூர் அருகே உள்ள கோனூர் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மன்னாதன்(55). நங்கவள்ளி மின்வாரிய அலுவலகத்தில் கம்பி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இன்று (செவ்வாய்கிழமை) மாலை  பெரிய சோரகை கிராமம் குட்டிகரடு என்ற இடத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. 

பழுதை சரிசெய்ய டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய மன்னாதன் மின்சார இணைப்பை துண்டிக்காமலே பணி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நங்கவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT