தற்போதைய செய்திகள்

அ.குரும்பபாளையத்தில் கால்வாயில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் சாக்கடைக் கால்வாயில் விழுந்த பசுமாட்டை இன்று (சனிக்கிழமை) உயிருடன் மீட்கப்பட்டது.

DIN

அவிநாசி: சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் சாக்கடைக் கால்வாயில் விழுந்த பசுமாடு இன்று (சனிக்கிழமை) உயிருடன் மீட்கப்பட்டது.

வேட்டுவபாளையம் ஊராட்சி அ.குரும்பபாளையம் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான பசுமாடுகள் அருகே உள்ள கிரின்லேண்ட் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்துள்ளன.

அப்போது, ஒரு பசுமாடு  திடிரென அப்பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாயில் விழுந்து எழுந்திருக்க முடியமால் சிக்கித் தவித்தது. உடனே மாட்டின் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் ஆர். கணேசன் உள்ளிட்டோர் சம்பவயிடத்திற்கு வந்து மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் மாட்டை மீட்க இயலாததால், ஜேசிபி வாகன இயந்திரம் கொண்டு வரப்பட்டு, சாக்கடையின் இருபுறமும் குழி பறித்து, சாக்கடை கால்வாய் உடைக்கப்பட்டு பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவர் மூலம் போதுமான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கமா, வெள்ளியா? அதிர்ச்சியைக் கூட்டுவது எது? விலை நிலவரம்!

காஸா விஷயத்தில் பாகிஸ்தான் தேவையில்லை: இஸ்ரேல் கறார்

வாக்காளர் பட்டியல்! சென்னையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!

பாகிஸ்தான் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் தோல்வியைக் காட்டுகிறது: ஜெனரல் அனில் சௌஹான்

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

SCROLL FOR NEXT