அசனாமாப்பேட்டை கிராமத்தில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள். 
தற்போதைய செய்திகள்

அசனமாப்பேட்டை கிராமத்தில் கஞ்சி தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டம்

செய்யாறை அடுத்த அசனமாப்பேட்டை கிராமத்தில் நெசவாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கக் கோரி கஞ்சி தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) ஈடுபட்டனர். 

DIN

செய்யாறு: செய்யாறை அடுத்த அசனமாப்பேட்டை கிராமத்தில் நெசவாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கக் கோரி கஞ்சி தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் அசனமாப்பேட்டை கிராமத்தில் நெசவாளர்கள் நிவாரணம் வழங்கக் கோரி கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் வாழ்வாதாரம் இழந்த செநவாளர் குடும்பங்களுக்கும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கும் தமிழக அரசு ரூ.2 ஆயிரம் நிவராணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தாகத் தெரிகிறது. அவ்வாறு  அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை இது நாள் வரையில் நெசவாளர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், அந்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும், மேலும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நெசவாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் அசனமாப்பேட்டை, தென்கழனி, பெருமாந்தாங்கல், பெருங்கட்டூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT