தற்போதைய செய்திகள்

அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனாவா? உதவியாளர் மறுப்பு

DIN

தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனா நோய்த் தொற்று என்று பரவிய தகவல் தவறானது என்று அமைச்சரின் உதவியாளர் விளக்கமளித்துள்ளார்.

சண்முகத்தின் சொந்த ஊரான திண்டிவனம் பகுதியில் அமைச்சர் சி.வி. சண்முகம் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இந்த நிலையில் இதுபற்றி அவருடைய உதவியாளர் ராஜாராமன் விளக்கமளித்துள்ளார்.

"கடந்த சில தினங்களாக வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்ததினால் சென்னையிலேயே அமைச்சர் சி.வி. சண்முகம் இருந்துவந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது திண்டிவனம் இல்லத்திற்கு திரும்பிய அமைச்சர், ஓய்வு எடுத்து வந்தார். பின்னர், மீண்டும் உடல் பரிசோதனைக்காக சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

இச்சூழலில் திட்டமிட்டு, அமைச்சருடைய உடல்நிலை குறித்து தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருவது  முற்றிலும் தவறானது.

கடந்து சில நாட்களுக்கு முன்பாக அவர் கரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. தற்போது பரப்பப்படும் தகவல் தவறானது" என்று திண்டிவனத்திலுள்ள அமைச்சரின் நேர்முக உதவியாளர் ராஜராமன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT