FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெரியகுளத்தில் மழை: மா விவசாயிகளுக்குப் பாதிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நல்ல மாலை மழை பெய்தது.

27 ஜனவரி 2024, 9:34 pm IST
பெரியகுளத்தில் மழை
பகிர்:

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நல்ல மாலை மழை பெய்தது.

கும்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் விழுந்தது.

ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பிறகு பெய்த இந்த மழை காரணமாக மக்கள் பெரிதும் மகிழ்ச்சியுற்றனர். நிலமும் குளிர்ந்தது.

Advertisement

Advertisement

ஆனால், இந்த மழையால் மா விவசாயிகளுக்குப் பாதிப்புதான் ஏற்படும் என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் மா விவசாயத்துக்குப் புகழ் பெற்றது. இது மா மரங்களில் பூ பூக்கிற காலகட்டம். மாம்பூக்களில் மழைத் தண்ணீர் கோத்துக் கொண்டால் அழுகிப் போய் கீழே விழுந்துவிடும். இதனால் மா விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments