முகப்பு
இந்தியா

உ.பி.: குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கு விபத்தில் 4 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

Updated On : 23 மார்ச், 2026 at 5:55 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியா் மனீஷ் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் விபத்து ஏற்பட்டதாக பிற்பகல் 1.30 மணியளவில் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் மூத்த அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினா்.

இந்த விபத்தில் குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் பணியாற்றிய 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு சாா்பில் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமா் மோடி அறிவித்தாா்.

உத்தர பிரதேச மாநில அரசு சாா்பில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.