குடிதாங்கிச்சேரியில் 
தற்போதைய செய்திகள்

கூத்தாநல்லூர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் கிருமிநாசினி தெளிப்பு

கூத்தாநல்லூர் மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

DIN

கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூரில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளியில், ஞாயிற்றுக்கிழமை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த பனங்காட்டாங்குடி, தமிழர் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களிலும், அரசு அனுமதி பெற்று, மனோலயம் மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளி நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு பள்ளிகளிலும் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். கூத்தாநல்லூரில் 14 வயதுக்குள்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளும், 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் குடிதாங்கிச்சேரியிலும் உள்ளனர்.

கரோனா தொற்று பரவி விடாமல் இருக்க அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த இரண்டு மன வளர்ச்சி குன்றிய பள்ளிகளிலும், கிருமிநாசினியும், ப்ளீச்சிங் பவுடரும் தெளிக்க வேண்டும் என தினமணி டாட் காமில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. 

பனங்காட்டாங்குடியில்

இதன் எதிரொலியாக, மனோலயம் மன வளர்ச்சி குன்றியோருக்கான கூத்தாநல்லூர் பள்ளியிலும், குடிதாங்கிச்சேரி உள்ளிட்ட இரண்டு பயிற்சிப் பள்ளிகளிலும், கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா ராதாகிருஷ்ணன் உத்தரவின்படி, 10 பேர் கொண்ட நகராட்சி ஊழியர்கள், பள்ளியைச் சுற்றிலும், பள்ளியின் உள்ளே சமையல் அறை உள்ளிட்ட அனைத்து  இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து, ப்ளீச்சிங்  பவுடரும் தூவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லெஜெண்ட் சரவணனின் லீடர் கிளிம்ஸ்!

உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் - ஆராய்ச்சி உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

அஜித்குமார் கொலை வழக்கு: நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை! - சிபிஐ தகவல்

மக்களவைக்கு மோடி வருவாரா? வந்தால் நரவணே நூலை பரிசளிப்பேன்! ராகுல்

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

SCROLL FOR NEXT