தற்போதைய செய்திகள்

மன்னார்குடியிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 7 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

DIN


திருவாரூர்: பிகார் தொழிலாளர்கள் 7 பேர் மன்னார்குடியிலிருந்து சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினக்கூலி சுமைத் தூக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து இவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவித்து வந்தனர். இதனால், அவர்கள் மன்னார்குடி அடுத்துள்ள இடையர் நத்தம் கிராமத்திலேயே முடங்கினர்.

இதையடுத்து, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மன்னார்குடி வருவாய் வட்டாட்சியரிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

 இந்த நிலையில், வட மாநில தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக, தஞ்சையிலிருந்து சிறப்பு ரயில், திங்கள்கிழமை இரவு இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. 

இதையடுத்து மன்னார்குடி பகுதியில் தங்கியிருந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேரையும் மன்னார்குடி வட்டாட்சியர் என். கார்த்திக் சிறப்பு அரசுப் பேருந்தின் மூலம் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT