தற்போதைய செய்திகள்

ஆஸ்துமா பிரச்சினையா? முகக்கவசம் வேண்டாம் : பிரிட்டன் அறிவுரை

DIN

ஆஸ்துமா அல்லது வேறு நுரையீரல் பிரச்சினைகள் இருப்பவர்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்க்குமாறும் இதன் மூலம் சுவாசிப்பது கடினமாகிவிடும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் கடந்த வாரத்தில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், இரண்டு மீட்டர் தொலைவு தள்ளியிருக்க முடியாதவர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அரசு அறிவுறுத்தியிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களைப் பாதிக்கக்கூடிய தொற்றுகள் பரவாமல் தடுத்து நிறுத்தி கரோனா வைரஸ் பரவலை முகக்கவசங்களால்  தடுக்க முடியும். அணிந்திருப்பவர்களுக்குத் தொற்றாமல் முகக்கவசங்களால் தடுக்க இயலாது.

ஆஸ்துமா பிரச்சினையுள்ள சிலருக்கு முகக்கவசம் அணிந்திருப்பது சிரமமாக இருக்கும், சுவாசிப்பது கஷ்டமாக இருக்கும். அத்தகைய பிரச்சினையிருப்போர் முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டியதில்லை என்று பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT