தற்போதைய செய்திகள்

இடிவிழுந்து புளியமரம் பற்றியெரிந்தது: தென்னங்கீற்றுகள் நாசம் 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி கிராமத்தில், வெள்ளிக்கிழமை இரவு, இடி விழுந்ததில், புளியமரம் தீப்பற்றி எரிந்தது.

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி கிராமத்தில், வெள்ளிக்கிழமை இரவு, இடி விழுந்ததில், புளியமரம் தீப்பற்றி எரிந்தது. மரத்திற்குக் கீழே அடியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தென்னங்கீற்றுகளும் எரிந்துநாசமானது.

வாழப்பாடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 6.30 மணி முதல் 7.10 வரை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது பொன்னாரம்பட்டி கிராமத்தில், சாலையோரத்தில் இருந்த, 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் மீது, இடி விழுந்ததில் தீப்பற்றி எரிந்தது.

மரத்திற்கு அடியில் கூலித்தொழிலாளர்கள் முடைந்து அடுக்கிவைத்திருந்த நூற்றுக்கணக்கான தென்னங்கீற்றுகளும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்து, குடியிருப்பு பகுதிகளுக்குத் தீ பரவாமல் தடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT