லண்டனில் காவல்நிலையம் மீது கார் மோதியது: விபத்தா, தாக்குதலா?
லண்டனில் காவல் நிலையத்தின் மீது ஒரு கார் மோதியதாக பிரிட்டிஷ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் காவல் நிலையத்தின் மீது ஒரு கார் மோதியதாக பிரிட்டிஷ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது விபத்தா, திட்டமிட்ட தாக்குதலா என்பது பற்றிக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதில் ஒருவரும் காயமடையவில்லை.
கட்டடத்தின் மீது கார் மோதியதைத் தொடர்ந்து, எட்மண்ட்டன் காவல்நிலையம் காலி செய்யப்பட்டது.
இந்த சம்பவத்துக்குக் காரணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வாகனத்தை சிறப்பு அலுவலர்கள் சோதனை செய்துவருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்துவரும் நிலையில், இந்தக் காவல்நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் மக்கள் புழங்கத் தடை செய்யப்பட்டுள்ளது.