முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் மது அருந்தியதால் 5 பேர் பலி

ராஜஸ்தானில் அதிகளவில் மது அருந்தியதால் 5 பேர் பலியானதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

Updated On : 22 ஜூலை, 2025 at 11:21 AM
கோப்புப்படம்
பகிர்:

ராஜஸ்தானில் அதிகளவில் மது அருந்தியதால் 5 பேர் பலியானதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தின் கமான் பகுதியில் மது அருந்திய 5 பேர் சுயநினைவை இழந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் 5 பேரும் பலியாகினர்.

இதுகுறித்து கமன் காவல் நிலைய நிலைய அதிகாரி சுமித் மெஹெர்டா கூறுகையதாவது:

இச்சம்பவத்தில் பலியான 5 பேரும் மதுவுக்கு அடிமையானவர்கள். அதில் 4 பேரின் குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்துவிட்டனர். ஆகையால் பிரேத பரிசோதனை செய்யமுடியவில்லை.

மேலும், 5வது நபர் மதுராவில் உள்ள மருத்துவமனையில் பலியானார். அவர் இறந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவு கிடைத்த பிறகு தெரியவரும், அவர்கள் எங்கு மது அருந்தினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →