பெங்களூரில் 4 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பலி
பெங்களூரு மாவட்டத்தில் மட்டும் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 3,997 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு மாவட்டத்தில் மட்டும் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 3,997 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநில சுகாதரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி,
இன்று மாநிலம் முழுவதும் புதிதாக 2,154 பேருக்கும், பெங்களூரில் புதிதாக 1,195 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 8,60,082 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மாநிலம் முழுவதும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெங்களூரில் மட்டும் 9 பேர் பலியானதால் மொத்த பலியின் எண்ணிக்கை 3,997 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,198 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 8,20,590 ஆக உள்ளது. தற்போது 27,965 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.