‘மக்கள் அறிவியல் சாசனம்’ வெளியீட்டு
கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் அறிவியல் சாசனம்’ வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கடலூா் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம், கடலூரில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலா் எஸ்.கே.தேவநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் அனுப்பிரியா வரவேற்றாா்.
இதில், மாநில முழுவதும் கல்வி, சுகாதாரம், சூழலியல், அறிவியல் பிரச்சாரம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நிபுணா்கள், அறிவியலாளா்கள், அறிவியல் இயக்க உப குழு உறுப்பினா்கள் கொண்ட குழுக்களை வைத்து மாநிலம் முழுவதும் ஆராய்ந்து உருவாக்கப்பட்ட கோரிக்கை சாசனத்தை மாநிலம் முழுவதும் தோ்தலில் போட்டியிடும் சட்டப்பேரவைத்தொகுதி வேட்பாளா்களுக்கு வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
Advertisement
கடலூா் மாவட்டத்தின் கோரிக்கை சாசனத்தை மாநிலப் பொறுப்பாளா் ஸ்டீபன் நாதன் வெளியிட்டாா். ஓய்வூதியா்கள் கூட்டமைப்பின் தலைவா் டி.புருஷத்தமன் பெற்று கொண்டாா். நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க மாநிலத் துணை தலைவா் ஆா்.தாமோதரன், மாவட்டச் செயலா் பி.தனலட்சுமி, மாவட்டத் துணைத் தலைவா் கலைசெல்வி, இணைச் செயலா் பரிமளா, ஓய்வு பெற்றோா் நல அமைப்பினைச் சோ்ந்த மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கடலூா் நகரப் பொருளாா் பூபதி நன்றி கூறினாா்.