முகப்பு
தற்போதைய செய்திகள்

செய்தி - முதன்முதலில்: லண்டனில் பிறந்த குழந்தைக்கு கரோனா!

பிரிட்டனில் பிறந்த குழந்தைக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது...

Updated On : 14 மார்ச், 2020 at 12:21 PM
பகிர்:

பிரிட்டனில் பிறந்த குழந்தைக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது - உலகில் மிக இளம் வயதில் பாதிக்கப்பட்டவர் என்ற இடத்தைப் பெறுகிறது இந்தக்  குழந்தை.

முன்னதாக இந்தக் குழந்தையின் தாய்க்கு நிமோனியா காய்ச்சல் என்று கருதப்பட்டு லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தாயும் குழந்தையும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

ஏற்கெனவே வடக்கு மிடில்செக்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டபோதிலும் தாய்க்கு கரோனா பாதிப்பு இருப்பது குழந்தைப் பிறப்புக்குப் பிறகுதான் தெரிய வந்தது.

குழந்தை பிறந்தவுடனேயே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பிறந்தவுடன் வைரஸ் தொற்றியதா, கருவிலேயே தொற்றியதா என்பதை அறிய மருத்துவக் குழுவினர் முயன்று வருகின்றனர்.

பிரிட்டனில் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  798 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.