முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா: பிரிட்டனில் தொண்டர் படையில் 5 லட்சம் பேர்! கைதட்டி மக்கள் பாராட்டு

பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களுக்கு உதவுவதற்காகத் தேசிய நல்வாழ்வு சேவை (நேஷனல் ஹெல்த் சர்வீஸ்) தொண்டர் படையொன்றை மக்கள் ராணுவம் என்ற பெயரில் அமைத்திருக்கிறது.

Updated On : 27 மார்ச், 2020 at 1:30 PM
பகிர்:

பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களுக்கு உதவுவதற்காகத் தேசிய நல்வாழ்வு சேவை (நேஷனல் ஹெல்த் சர்வீஸ்) தொண்டர் படையொன்றை மக்கள் ராணுவம் என்ற பெயரில் அமைத்திருக்கிறது.

இந்த மக்கள் ராணுவத்தில் இணைந்த 5 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களைப் பாராட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக, பிரிட்டன் நேரப்படி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு நாடு முழுவதும் அனைத்து மக்களும் அவரவர் வீடுகளில் நின்று கைதட்டினர்.

1948-ல் அமைக்கப்பட்ட இந்த அமைப்புதான் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தைப் போல) பிரிட்டிஷ் மக்களின் நல்வாழ்வுப் பணிகளைக் கவனித்துக் கொள்கிறது.

Advertisement

இக்கட்டான இந்தத் தருணத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்படும் மக்கள் ராணுவத்தில் தன்னார்வத் தொண்டர்கள் இணையலாம்; 2.5 லட்சம் தொண்டர்கள் தேவை என்று நல்வாழ்வுத் துறைச் செயலர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று 24 மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளிலும் மருத்துவப் பணிகளிலும் கரோனா தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளிலும் அரசு அமைப்புகளுக்கு உதவுவார்கள்.

இந்தப் பணியிலிருக்கும் ஆபத்தைக்கூட கருத்தில்கொள்ளாமல் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ள நிலையில், மக்களின் உதவியைத் தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த எண்ணிக்கையை 7.5 லட்சமாக அதிகரிக்கலாம் என பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.