தற்போதைய செய்திகள்

புதுச்சேரி: ஏப்.30 வரை மதுக்கடைகள் மூடல்

DIN

புதுச்சேரியில் ஏப்ரல் 30-ம் தேதி வரை அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், சாராயக் கடைகள், கள்ளுக் கடைகளையும் மூட வேண்டும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கத்தைப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

பொது முடக்கம் அமலில் இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளான மருந்தகம், பால், பெட்ரோல், மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் இயங்குவதற்குக்  கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT