சங்ககிரி: சங்ககிரியில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தினையொட்டி, சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சார்பில் சங்ககிரி பழைய பேருந்துநிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சார்பில் பழைய பேருந்துநிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலர் (பொ) டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனையடுத்து சங்கிகரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 22 ஊராட்சி, பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் நிர்வாகிகள் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
மாவட்ட துணைச் செயலர்கள் க.சுந்தரம், சம்பத்குமார், சங்ககிரி ஒன்றியச் செயலர் (பொ)கே.எம்.ராஜேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா, முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து, நகரச் செயலர் எல்ஐசி சுப்ரமணியன், முன்னாள் நகரச் செயலர் கே.எம்.முருகன், முன்னாள் பால்வளத்தலைவர் சின்னதம்பி, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சரவணன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.வரதராஜன், வழக்குரைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கிறிஸ்டோபர், துணை அமைப்பாளர்கள் ஆர்.அருள்பிரகாஷ், வி.என்.ராஜா, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் கேஜிஆர். ராஜவேலு, செல்வராஜ், சண்முகம், கோகிலா சங்கர், கங்காதேவி, இளைஞரணி நிர்வாகிகள் பூபதி, சங்கர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.