புதிய செயல் அலுவலர் இளவரசி 
தற்போதைய செய்திகள்

மானாமதுரை பேரூராட்சி புதிய பெண் செயல் அலுவலர் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலராக இளவரசி பொறுப்பேற்றுக் கொண்டார்.

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலராக இளவரசி பொறுப்பேற்றுக் கொண்டார்.

மானாமதுரை பேரூராட்சிக்கு பல மாதங்களாக செயல் அலுவலர் நியமிக்கப்படாத நிலை இருந்து வந்தது. இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் கூடுதல் பொறுப்பாக மானாமதுரை பேரூராட்சி நிர்வாகத்தையும் கவனித்து வந்தார்.

இதையடுத்து மானாமதுரை  பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 

இதையடுத்து தற்போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த இளவரசி அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் இளவரசி செயல் அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். மானாமதுரை பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் இவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மானாமதுரை பேரூராட்சிக்கு முதல் முறையாக பெண் ஒருவர் செயல் அலுவலராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடையூறின்றி தற்காலிகக் கடைகளுக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

திட்டமிடப்படாத கட்டுமானங்கள்: வேடசந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் பாதிப்பு!

தமிழ்நாடு -ஐரோப்பிய குறு, சிறு நிறுவனங்கள் மாநாடு

ஒட்டன்சத்திரம் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

விருப்ப எண்கள் ஏலம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

SCROLL FOR NEXT