தற்போதைய செய்திகள்

'ரூ.2,756 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி'

DIN

சென்னை: கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தரப்பட்ட ரூ.2,756 கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.  

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கரோனா சிறப்பு கடன் உள்பட ரூ20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* குடும்பத்தலைவர் என்பது பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத்தொகை என்பது தவறான புரிதல்.

* உதவித்தொகை இல்லத்தரசிகளுக்கானது என்பதால் குடும்பத்தலைவர் பெயரை மாற்றத் தேவையில்லை.

* இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும்.

* மகளிர் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* அதிமுக ஆட்சியில் பயிர் கடன் தள்ளுபடியில் நிறைய குளறுபடிகள், முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் அவை குறித்து உரிய விசாரணைகளுக்குப் பின் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு செயல்படுத்தப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT