தற்போதைய செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர்கள்!

DIN


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கும் காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 

தமிழகத்தின் மாநில மலராக விளங்கும் செங்காந்தள் மலர்  கார்த்திகை மாதத்தில் பூத்துக் குலுங்குவது வழக்கம். இதன் காரணமாக  கார்த்திகைப் பூ எனவும் அழைக்கப்படுகிறது. 

இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதி, ஆசனூர் மற்றும் கடம்பூர் வனப்பகுதியில்  அதிக அளவில் செங்காந்தள் மலர்கள் பூத்துள்ளன.

சாலையோர வனப்பகுதியிலும் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் செங்காந்தள் மலரை கண்டு ரசித்துச் செல்கின்றனர். 

சத்தியமங்கலம் வனப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பச்சைப் பசேல் என வனப்பகுதி அழகாக காட்சியளிக்கும் நிலையில் தற்போது செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குவதால் வனப்பகுதிக்கு மேலும் மெருகூட்டி உள்ளதாக வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

செங்காந்தள் மலர் மருத்துவ குணமிக்கதாக  கருதப்படுவதால் சாலையோர வனப்பகுதியில் பூத்துள்ள செங்காந்தள் மலர்களை சாலையில் பயணிப்போர் பறித்து செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

SCROLL FOR NEXT