தற்போதைய செய்திகள்

‘அனைத்து துறைகளையும் கைவிடுவதையே பட்ஜெட் உணர்த்துகிறது’: கேரள முதல்வர்

ANI

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்து துறைகளையும் மத்திய அரசு கைவிடுவதையே உணர்த்துகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

இந்நிலையில் பட்ஜெட் குறித்து கேரள முதல்வர் கூறியதாவது,

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கும், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்குமான திட்டங்களாக உள்ளது.

இதன்மூலம் அனைத்து துறைகளையும் மத்திய அரசு கைவிடுவதையே உணர்த்துகிறது. மேலும், இது நாட்டை முழுவதுமாக வணிக கண்ணோட்டத்தில் பார்ப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT