தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி

DIN

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருந்த வி.நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த பிப்.22 ராஜிநாமா செய்தது.

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி சட்டபேரவையை அரசியல் சாசனப் பிரிவு 329 மற்றும் யூனியன் பிரதேச பிரிவு 51 உடன் ஆட்சியை கலைக்க உள்துறைக்கு அறிக்கை அளித்தார். 

ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் புதுச்சேரி சட்டப்பேரவையைக் கலைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும் புதுச்சேரி சட்டபேரவையை கலைக்க குடியரசுத் தலைவருக்கும் அமைச்சரவை பரிந்துரை செய்தது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படுவதற்கு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார். 

அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT