எழுத்தாளர் ஆ. மாதவன் காலமானார்
புகழ்பெற்ற எழுத்தாளர் ஆ. மாதவன் காலமானார்.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஆ. மாதவன் காலமானார்.
மறைந்த மாதவனுக்கு வயது 86. தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், குடும்பத்தினர் இடம் பெயர்ந்ததால் திருவனந்தபுரத்தில் வசித்துவந்தார்.
எழுத்தாளர் ஆ. மாதவனின் முதல் நாவலான புனலும் மணலும், 1970-களில் வாசகர் வட்டத்தால் வெளியிடப்பட்டது. கிருஷ்ணப் பருந்து இவருடைய புகழ்பெற்ற நாவல். தூவானம் என்றொரு குறுநாவலும் எழுதியுள்ளார்.
Advertisement
எண்ணற்ற சிறுகதைகளும் எழுதியுள்ளார். திருவனந்தபுரத்தில் சாலைத் தெருவில் கடை வைத்திருந்த இவர், கடை வீதிப் பின்னணியில் நிறைய கதைகளை எழுதியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு இலக்கியச் சுவடுகள் நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் மாதவன்.
மலையாளத்திலிருந்து இரு நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.