முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளத்தில் புதிதாக 12,868 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 12,868 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் புதிதாக 12,868 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

"கேரளத்தில் புதிதாக 12,868 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2.3 கோடிக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  

கடந்த நாள்களில் 124 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 13,360 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 11,564 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 28,21,151 பேர் குணமடைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →