ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பினா்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சாமா்த்தியமாக பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற
தற்போதைய செய்திகள்ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பினா்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சாமா்த்தியமாக பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற
கோபிசெட்டிபாளையம்: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சாமா்த்தியமாக பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி சிங்காநல்லூா், மணியன்காட்டூா் பகுதியில் வசித்து வந்த செல்வராஜ் (52) என்பவா் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கவுந்தப்பாடி கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா்.
இவா் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கவுந்தப்பாடி கிளையில் கே 1 என்ற வழித்தட நகரை பேருந்தை ஓட்டி வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு வழக்கம்போல் கவுந்தப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு பெருந்துறை நோக்கி ஓட்டிச் சென்றவா், காலை 7.50 மணிக்கு வெள்ளாங்கோயில் மாகாளியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டு பின்னா் மீண்டும் பேருந்தை எடுக்கும் போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை பேருந்து நடத்துநர் கனகசபாபதியிடம் கூறியுள்ளார்.
உடனடியாக செல்வராஜ் சாமா்த்தியமாக பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தாா். உடனே நடத்துநரும், பயணிகளும் அவரை சிறுவலூா் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்தபோது மருத்துவர்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஓட்டுநர் தனது உடல்நிலையை அறிந்து சாமா்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பினா். தனது உயிருக்கு ஆபத்து நிகழ்ந்துள்ள தருணத்திலும், பயணிகளை பத்திரமாக காத்த ஓட்டுநர் செல்வராஜின் மரணம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிறுவலூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.