தற்போதைய செய்திகள்

உ.பி.யில் மின்னல் தாக்கி 40 பேர் உயிரிழப்பு

DIN

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடியுடன் பலத்த மழை பெய்தது.  இதில், பல்வேறு பகுதிகளில் இடி - மின்னல் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகளவாக, பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 14 பேர் பலியாகினர்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மழையில் பலியான கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஜூலை 10ஆம் தேதி பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 20 பேர்  உயிரிழந்தனர்.

தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்திலேயே தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை தென்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT