வாழப்பாடியில் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் புத்தக கண்காட்சி நிறைவு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் புத்தக கண்காட்சி நிறைவு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
வாழப்பாடியில் நெஸ்ட் அறக்கட்டளை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து, கடந்த 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் முதன்மை முறையாக புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது . வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஆர்வத்தோடு புத்தகக் கண்காட்சியை கண்டு களித்து தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
புதன்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவிற்கு, வாழப்பாடி இலக்கிய பேரவை துணைத் தலைவர் மா.கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் சிவ.எம்கோ வரவேற்றார். தாளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
மருத்துவர் சி.மோதிலால், வாழப்பாடி நகர திமுக செயலாளர் பி.சி. செல்வம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சி.பொன்னம்பலம், மருத்துவர் அனுசுயா சிவலிங்கம், நெஸ்ட் அறக்கட்டளை தலைவர் பெரியார்மன்னன், செயலர் முனைவர்.ஜவஹர் ஆகியோர், நியூசெஞ்சுரி புத்தக நிறுவன சேலம் கிளை மேலாளர் சத்தியசீலனுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு. ரூ. 3,500 மதிப்பிலான பயனுள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது!வட்டார கல்வி அலுவலர்கள், சுரேஷ், ஜெயலட்சுமி ஆகியோர் புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியை சத்தியகுமாரியிடம் ஒப்படைத்தனர்.
இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செல்வம், ஷபீராபானு, மணிமேகலை, ஆசிரியர்கள் துளி ராஜசேகரன், பழனிமுத்து, கவிஞர்.சண்முக சுந்தர வடிவேலு, கலைஞர்புகழ், புதுப்பாளையம் பன்னீர்செல்வன், இலக்கியப் சமையல் கலைஞர் சிலம்பரசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக சிறுவன் சிபிஅரசு நன்றி கூறினார்.