சேலம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு முகாமிற்கு வருகை தந்துள்ள கிரிக்கெட்  வீரர்கள். 
தற்போதைய செய்திகள்

சேலம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சேஷன்சாவடி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் கிரிக்கெட் மைதானத்தில், சேலம் மாவட்ட அணிக்கு (16 வயதுக்கு உள்பட்டோர்) வீரர்கள் தேர்வு முகாம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சேஷன்சாவடி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் கிரிக்கெட் மைதானத்தில், சேலம் மாவட்ட அணிக்கு (16 வயதுக்கு உள்பட்டோர்) வீரர்கள் தேர்வு முகாம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேஷன்சாவடி கிராமத்தில், சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் வாயிலாக, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது.

இந்த மைதானத்தில், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 16 வயதுக்கு உள்பட்டோருக்கான சேலம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட 16 வயதுக்குட்பட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வீரர்களுக்கான பெயர் பதிவு, 10 மணி வரை தொடர்ந்தது.

இதனையடுத்து சான்றிதழ்கள் சரிபார்ப்புக்குப் பிறகு, வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற்றது. தகுதி வாய்ந்த வீரர்களை தேர்வு செய்து, சேலம் மாவட்ட அணியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் மற்றும் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் அமைப்பினர் செய்து வருகின்றனர்.  

இந்த கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாமை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து கிரிக்கெட் ஆர்வலர்கள் ஏராளமானோர் கிரிக்கெட் மைதானத்தில் குவிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

அசோக் லேலண்ட் விற்பனை 8% உயா்வு

SCROLL FOR NEXT