தற்போதைய செய்திகள்

திருப்புவனத்தில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதிய வழித்தடங்களில் அரசு நகர பேருந்துகள் இயக்கத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார். 

திருப்புவனத்தில் இருந்து மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம், கழுவன்குளம், மிளகனூர், கீழச்சொரிக்குளம், பிரமனூர், சிவகங்கை- மானாமதுரை வழியாக காளையார்கோயில்  என ஏழு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. 

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவில் கலந்துகொண்டு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசியதாவது:

கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் போக்குவரத்து துறை மிகவும் சீர்கெட்டு ரூ 33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு நாளொன்றுக்கு 13 ஆயிரம் பேருந்துகள் வரை மட்டுமே தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் போக்குவரத்து துறை சீர்செய்யப்பட்டு தினமும் 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு விரைவில் தினமும் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நகரப் பகுதிகள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளில் தேவையான பேருந்து வசதிகள் செய்து தரப்படும். தமிழகத்தில் பெண்கள் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ரூ.1358 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். 

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி போக்குவரத்துக்கழக அதிகாரிகள், திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப.மதியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT