தொப்பலாக்கரையில் 200க்கு மேற்பட்டோருக்கு இலவச காய்கறிகள் தொகுப்பு வழங்கல்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தினர் 200க்கு மேற்பட்டோருக்கு, மா.கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜூ தலைமையில் இலவச காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தினர் 200க்கு மேற்பட்டோருக்கு, மா.கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜூ தலைமையில் இலவச காய்கறிகள் அடங்கிய தொகுப்பு அக்கட்சி சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் வழங்கப்பட்டது.
திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கிராமத்தின் மா.கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜூ தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்டராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது தொப்பலாக்கரை கிராமத்தினர் சுமார் 200க்கு மேற்பட்டோருக்கு இலவசக் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வெங்கட்டராமன் நேரில் வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.